முன்னூறு நாள்தானே காத்திருந்தேன்
உலகம் காண
முப்பது வருடம் தவமிருந்தே
உனைக் கண்டேன்
முன்தினம் பார்த்தேன் என் மூச்சானாய்
கண்ணில் நுழைந்தென் கனவானாய்
கனவெலாம் போதாதென நேரில் வந்து காதலானாய் ....
பச்சை நிறத்தொரு பறவை
என் பக்கத்தில் உட்கார்ந்து வருதே
முகம் கூட பார்க்காது முழுதாய் மூழ்கினேன்
முத்தக் கிண்ணம் அவள் கன்னம்
அது எத்தனை முத்தம் கொள்ளும்?
