Friday, 25 March 2011

அன்னைத் தமிழ் என்பேன்

அன்னைத் தமிழ் என்பேன்
ஆங்கிலம் அவள் என்பேன்
தமிழனும் தமிழனும் காணும் போது
தமிழ் பேச வேண்டும்
ஆங்கில அறிவெனும் பேதமை நீங்க வேண்டும்





















அய்யா என்பதை அவமானமாக என்னும்
மனம் மாற வேண்டும் நமக்கு மன மாற்றம் வேண்டும்
என்னொரு எழுத்திலும்
உன்னொரு நாவிலும் விழும் தமிழ் ஆலம் வித்தாகட்டும்  
விழுவதும் எழுவதர்கே
விருச்சம் எழட்டும் விழுதுகள் விடட்டும்
அதில் உன் மகனும் என் மகளும் 
 ஊஞ்சல் ஆடட்டும்
கண்ணதாசனும் கமலஹாசனும் பிறந்த
மாநிலத்தில்  பிறந்தவன் நான்
அதனால் என் தமிழில் ஒன்றும் வியப்பில்லை
கேட்பீர்கள் கண்ண தாசனுக்கும் கமலஹாசனுக்கும்
என்ன சம்பந்தம் என்று
அதீத  அன்பு தான் 
அன்னைத் தமிழ் மீது 

Wednesday, 23 March 2011

என்னவள்

காணும் பொருள் இட மெலாம் தெரியுமவள்
கண்மூடி நின்றால் என் உள் நின்று சிரிக்கிறாள்
கண்ணுறக்கம் கொண்டால் கனவில்
வந் தென் உறக்கம் கலைக்கின்றாள் 

காதல்

கருப்பாய் வெளுப்பாய்
பெருத்தும் சிறுத்தும்
இடையில் இருப்போர்க்கும்
காதல் வைத்தாய்
காலம் மட்டுமே பதில் சொல்லும் 
கேள்வி எல்லாம் காலம் முழுதும்
எனை ஏன் கேட்க வைத்தாய்
காதல் இல்லாது போகு ஓர் நாள்
.........
அணைக்க நினைத்ததெல்லாம் உள்ளுக்குள்ளே
அனைத்து கிடந்ததும் உள்ளத்திலே
உளம் தேடிய களைப்பு தீர 
அவன் உடல் தேடி யோர்
கடை வீதி கிளம்பிவிட்டான்
  
    

thamizhp penn

பச்சை நிறம் அறியாப்
பச்சைக் கிளி போலும்
அழகழகாய்ப்  பெண் கூட்டம்
அத்தனையும் கிளிக் கூட்டம்
மூக்கின் நிறம் போலும் முழுதாய் சிவப்பாய்
அழக ழகாய்ப்  பெண் கூட்டம்
எத்தனைப் பெண் கண்டும்
என் மனம் வெள்பவள்
மாநிறப் பெண்
என் மாநிலத்துப் பெண் 
தாவணி உடுத்திருப்பாள் 
தலை சீவி பின்னல் இட்டிருப்பால்
சிரிப்பால் என் சிந்தை கவர்வாள்  

ezhuththugal vaarththayaaga

எழுத்துக்கள் வார்த்தையாக
வார்த்தைகள் வரிகளாக
வரிகள் பக்கம் நிரப்ப எழுதுவேன்
உன்னை என் பக்கம் திருப்புவேன்
ஆட்சி செய்வேன் சொல்லாட்சி செய்வேன்
தமிழ் கவியுலகில் நல்லாட்சி செய்வேன்
எழுத்துப் பிழை இருந்தால் எடுத்துக் கூறுங்கள்
கருத்துப்  பிழை இருந்தால் அது கருத்தாலன் பிழை
கண்டு  கொள்லாதீர்

என் எண்ணத் துளிகளை சிந்துகிறேன்
என்னுள்ளும்  ஒரு கவிஞ்ஞ்ன்
இயல்பாய் எதுகை மோனை இன்றி
எண்ணத் துளிகளை சிந்துவேன்
எடுக்கவோ கோர்க்கவோ என்று
ஒரு தோழனோ தோழியோ வந்து
சிற்பி போல் என் எண்ணத் துளிகளை முத்துக்களாய்
மாற்றட்டும் மாலையாக்குவேன்
என் தமிழ் அன்னைக்கு சூட்டுவேன்

எண்ணத்தை  சொல்லுவேன்
எளிமையாய்  சொல்லுவேன்
கண்டதும்  கற்றதும்  கேட்டதும் சொல்கிறேன்
என்னுடையது  என்று ஏதும் இல்லை
புதிதாய்ச் சொல்ல
இப் பேரண்டத்திற்கு  நானும் புதிதல்ல
என் தமிழும் புதிதல்ல

நின் வெகுளி இல்லாது செய்

நேற்றிருந்தார் இன்றில்லா
நிலையில்லா இவ்வுலகில்
நாளை இன்றுக்காய்
வருந்தா நிலை வேண்டி
இன்றே இருப்போர்க்கு அன்பு செய்
நின் வெகுளி இல்லாது செய்
 

Tuesday, 15 March 2011

அதே போல் சாலைகள்
அதே போல் மனிதர்க் கூட்டம்
அதே போல் ஒன்றையொன்று
முத்தமிடும் வாகனங்கள்
எதுவும் உன் போல்  இல்லாத
இந்த ஊரும் எந்த பேரும் பிடிக்கவில்லை
பல்லிடைத் துனுக்குபோல்  
உன் நினைவு என்னைப் படாத
பாடாய் படுத்த...........


Monday, 14 March 2011

கவிதை

உப்பிலா உணவு போலும்
பொய்யிலா   கவிதை
உன்னை இட்டு
என்னை இட்டு
நம்மைப் போல்  பொய் இட்டுக்
கவிதை சமைப்போம்

நன்பன் ஆனந்தனுக்காய் சில வரிகள்

இன்றைய எழுத்துக்கு ஊக்க மருந்தான
நண்பன் ஆனந்தனுக்காய்
சில வரிகள் எழுத ஆசை
மீசை போலும் நீளும் அவன் கரம்
அன்புக்காய்
அது நீளும் நட்புக்காய்
நட்பே அழகாரம்தானே
அதற்கெதற்கு எழுதலங்காரம்
அதனால் நான்கு வரி மட்டும்

மொத்த விலை செரிடோனின் வியாபாரி

±ý ¦Á¡ò¾ Å¢¨Ä ¦º¡¢§¼¡É¢ý
Ţ¡À¡¡¢Â¡ö ¦Á¡ò¾Á¡ö «Åû Á¡È¢ Å¢¼
Óõ¨À¢ý ¯ûé÷ ¯óÐ ÅñÊ §À¡ø
ã¨Ç ÓØÐõ ¿¢¨Èò¾¢Õó¾ ¸¡Áõ
¨¸ÅÆ¢ ¸¨Ãó¾ À¢ýÛõ
¸¡¾ø ¿¢¨É×
¯¼ø ¯É¦¾É ¾È¢Â¡
«ýÀ¢ý ¯îºò¾¢ø ¸ðÊì ¸Ç¢ò¾¢ÕìÌõ ¸É×
«¾ü ¸Åû¾¡ý ¾¢Éõ ¯É×
§¾¡üÈô À¢¨ÆÂ¡§ÂÛõ
¿£¦Âý Óý §¾¡ýÈì ܼ¡§¾¡
¸É× ¦ÁöôÀ¼ ¯¨Èò¾
¸Å¢ï»É¢ý ÒШÁô ¦Àñ
¿£ Âø§Ä¡

Sunday, 13 March 2011

பெண் போல் அழகாய் ஏதுமில்லை
அதிலும் உன் போல் அழகாய் கண்டதில்லை
காணும் இடம் எல்லாம்
உன்னைப்  போல் காணும்
காதல் பித்து தலைக்கேறி
என் நிலை மாறும்
காதல் இல்லாதொரு நாள்  
என்னுயிர் காற்றோடு கலக்கச் செய்

Friday, 4 March 2011

இருளில் கடலிடை விட்ட போல் தவித்தேன்

மூளை விற்று இதயம்

¯¼ü §À¡Öõ ¯ÇôÀ¢üº¢ ¾ó¾ÅÙìÌ
¿£ º¢¨¾òÐ Áñɡ츢 À̾¢ þ¾Âõ
¯ÃÁ¡Ìõ ±ý þ¾Âô âî ¦ºÊìÌ
±ò¾¨É Ó¨È âò¾¡Öõ
´ù¦Å¡Õ âÅ¢Öõ þò¾¨É Å¡ºõ
±í¸¢ÕóÐ Åó¾Ð
¸¡¾ø ¿£÷ ¦¾Ç¢òÐì ã¨Çì
¸¨Ã¡ý «ñ¼¡Ð ¸¡ôÀ¾¡ø ¾¡§É¡ 

þ¾Âõ Å¢üÈ ã¨Ç §Åñ¼¡õ ±ïº¢Â
ã¨Ç Å¢üÚ þ¾Âõ Å¡í̧Åý
«ó¾ þ¾Âõ ¦¸¡ñÎ
±¨¾Ôõ Å¡í̧Åý

எடுத்து கவிழ்க்க என் இதயம் என்ன

எடுத்து கவிழ்க்க என் இதயம் என்ன
வெற்றுப் பாத்திரமா
பண்ட மாற்று செய்ய என் மனம்
பருப்போ உப்போ இல்லை
பணம் கொண்டு மணம் வேண்டாம்
மனம் கொண்டு மனம் வென்ற பின்
அன்புத் தோட்டம் அமைப்பேன்
அதில் காதல் பயிரிடுவேன்
கனி பறிப்பேன்
பண மணம் வேண்டாம்
மனம் மனம் வெல்லும்
காதல் மணம் கொள்வேன்
அதில் களி கொள்வேன்

எந்தை தன் சிந்தை குளிர

எந்தை தன் சிந்தை குளிர நான்
விந்தை பல புரியவும்
உடலொடு உயிர் தந்த அன்னையை
நான் உயிருள்ள வரை தொழவும்
வரம் தா என் இறைவா

மழை பின் மரம் போல்

உன் மெய் கண்டு
உயிர் கொண்ட என் கவிதைக்கு
உயிர் தந்தவள் நீ
என் உயிர்மெய் நீ
பெண் கண்டு பிறழா
ஆண் மனம் போல் அரிதாய் அவள்
கண் கண்டு கள்ளுண்ட போல் ஆனேன்
மழை பின் மரம் போல் சிரிப்பும் கண்டு
மலர் கொண்டு செல்வேன்
அவள் மனம் வெல்வேன்

கேள்வியை மறக்கும் வேள்வி

ஐந் தாறு   வயது இளைஞன் நான்
விவேகானந்தரைப் படித்தேன் 
"மது எல்லா கேள்விகளுக்கும் விடை அல்ல"
மது வேண்டாம் என்றேன்
                                                                                                               

விஜய மல்லையா வையும் படித்தேன் 
"விடை கிடைக்காத போது மது  கேள்வியை மறக்கடிக்க உதவும்"
இன்றொரு நாள்  கேள்வியை மறக்கும் வேள்வியில் இறங்கினேன்
களிக்காய்  மேற் கண்ட வரிகள்
கோப்பையில் குடியிருக்கவும்
கோல மயில் துணை இருக்கவும்
நான் கண்ணதாசனும் இல்லை
மயிலு இன்று பதினாறு
வயதினிலேயும்  இல்லை

நன்பன் இன்மாஸ் செந்திலுக்காக

என் எண்ணத் தொகுப்பு கடலாகட்டும்
வானம் போல் என் நண்பன் 
முகர்ந்து தன் காதலிக்காய் 
பொழிந்தாலும் வற்றா வளரட்டும்
உன் விரல் ஸ்பரிசமும் பிரிகையில்
என் நெஞ்சம் நனைத்த  
உன் கண்ணீர் ஈரமும்
என் உயிருடன் கலந்திருக்கும்
உன்னைக் காண்கையில் 
என் மூளை யில் செரடோனின்
அலையடிக்கிறதே
 ஒப்புவமை இல்லா உன் கண்
காண வேண்டும்
அதில் நான் காண வேண்டும்
அட்சய பாத்திரம் போல்
அன்பு பெருகிட வேண்டும்

எழுத்துக்கள் வார்த்தையாக

எழுத்துக்கள் வார்த்தையாக
வார்த்தைகள் வரிகளாக
வரிகள் பக்கம் நிரப்ப எழுதுவேன்
உன்னை என் பக்கம் திருப்புவேன்
ஆட்சி செய்வேன் சொல்லாட்சி செய்வேன்
தமிழ் கவியுலகில் நல்லாட்சி செய்வேன்